இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், போட்டியை ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்து கோட்டை விடுகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது.
இந்த தொடரின் மூலம் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷுப்மன் கில், ஆக்ரோஷமானக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே நேரம் அவரின் பேட்டிங் செயல்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் ஷுப்மன் கில் தோனியிடம் இருந்து அறிவுரைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அதில் “தோனி போல வீரர்களை சிறப்பாகக் கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது. அவரிடம் இருந்து கில் பெற்றுக்கொள்ளும் அறிவுரைகள் கேப்டனாக அவருடைய செயல்பாடுகளை நிச்சயம் மேம்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.