Publish Date: Tue, 14 Sep 2021 (16:03 IST)
Updated Date: Tue, 14 Sep 2021 (16:08 IST)
ஐபிஎல் வரலாற்றில் தல தோனி மிக அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
ஐபிஎல் தற்போது 13வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த 13 சீசன்களிலும் சேர்த்து தல தோனி இதுவரை மொத்தம் 150 கோடி சம்பளம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது தோனியின் சம்பளம் 6 கோடியாக இருந்தது. தற்போது 13 வது சீசனில் அவருக்கு சம்பளம் 15 கோடி ஆக உள்ளது. இந்த 13 சீசனில் 11 சீசன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இரண்டு சீசனில் புனே அணிக்காகவும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 13 சீசனிலும் சேர்த்து அவர் வாங்கிய மொத்த சம்பளம் சுமார் 150 கோடி என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக சம்பளம் வாங்கியவர் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடரில் மட்டும் 146 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது