Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட் ஆஃப் ஃபார்ம்? டி20 அணியில் இருந்து தோனி நீக்கம்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (12:35 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20-க்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர் முடித்துக்கொண்டு  இந்திய அணி அந்நாட்டுக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 வரும் 4 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 
 
இந்த போட்டிகளை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், டி20க்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 
இந்த ஆறு போட்டிகளில் இருந்து எப்போதும் இந்திய அணியில் நிரந்தமாக இருக்கும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு அவர் சில காலங்களாக சிறப்பாக செயல்படாததே காரணம் என கூறப்படுகிறது. 
 
இது குறித்து தேர்வு குழு, 2 வது விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்பபே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. தோனிக்கு ஓய்வுதான் கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டியில் தோனியின் எதிர்காலம் முடிந்து விடவில்லை என கூறப்பட்டுள்ளது. 
 
மேலும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments