Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை கிங்ஸ்-ல் இருந்து தோனி விலக முடிவு?

Advertiesment
சென்னை கிங்ஸ்-ல் இருந்து தோனி விலக முடிவு?
, புதன், 3 நவம்பர் 2021 (16:07 IST)
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  அந்த அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை கின்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாலும் தோனி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாகவே ரசிகர்கள் கருதினர். ஆனால் அவர் கடந்த முறை ஐபிஎல் போட்டியில் சோபிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதற்குப் பதிலடியாக இம்முறை சென்னை அணி ஐபிஎல்-14 வது சீசன் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல்-15 வது சீசனில் தோனி சென்னை அணிக்கு விளையாடுவார அல்லது ஓய்வு பெறுவாரா என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சென்னை அணியின் தலைவர் சீனிவாசன், தோனி இல்லாமல் சென்னை அணி இல்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்,  ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்காக ஏலம் நடைபெறவுள்ளதால் சென்னை கிங்ஸ் அணியில் இருந்து தோனி விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தன்னைத் தக்க வைக்க ஏலத்தில் அதிக தொகையைச் செலவிட வேண்டாம் என தோனி சென்னை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பையில் அதிக அரைசதங்கள்… பாபர் ஆசம் சாதனை!