Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தோல்வி: தோனி அதிரடி கருத்து!

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (18:34 IST)
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்தியா.
 
இந்திய அணியின் தொடர் தோல்வி குறித்து பலரும் விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் முன் வைத்து வருகிறோம். கேப்டன் கோலி சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூட நிருபரிடம் சீறினார். அந்த அளவுக்கு இந்த டெஸ்ட் தோல்வி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்நிலையில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் போது இந்திய அணியுடன் இணைய உள்ள நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது குறித்து கருத்து கேட்டனர்.
 
அதற்கு பதில் அளித்த தோனி, இந்தத் தொடரில் இதுவரை நடந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளோம். எதிரணியின் அனைத்து விக்கெட்களை வீழ்த்தினால்தான் போட்டியில் வெற்றி பெற முடியும். அப்படித்தான் இந்த போட்டியை நான் பார்க்கிறேன்.
 
பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சரியாக செய்தார்கள் ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்பதை தோனி மறைமுகமாக இப்படி கூறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனை ஏற்று கோலி அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாரா?.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments