அறுவை சிகிச்சைக்குப் பின் 8 வாரங்கள் ஓய்வு… கான்வேவுக்கு பதில் புதிய வீரரை தேடும் சூழலில் சி எஸ் கே!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (13:48 IST)
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி அதற்காக தயாராகி வருகிறது. தோனி ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தற்போது ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக கருதப்படும் நியுசிலாந்து அணியின் டெவன் கான்வே காயம் காரணமாக இப்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளாராம். அதனால் அவர் தொடர்ந்து  8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதனால் அவர் மே மாதம்தான் சி எஸ் கே அணியில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் சி எஸ் கே அணி அவருக்கு பதில் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments