Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வோர்ல்ட் கப்ல செஞ்ச மாதிரி சொல்லி அடிப்பாரா? – சன்ரைசர்ஸ் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்!

Prasanth Karthick
திங்கள், 4 மார்ச் 2024 (12:16 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.



இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளன. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோதும் இந்த போட்டியை காண ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். இந்த ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் கடந்த சில மாதங்கள் முன்னதாக நடந்து முடிந்திருந்தது. அதில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸை ரூ.20.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது.

இந்நிலையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சன்ரைஸர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என சன்ரைஸர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை ஒருநாள் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன. அப்போது ஆஸ்திரேலிய அணி கேப்டனான பேட் கம்மின்ஸ் “மைதானம் முழுவதும் இருக்கும் 1 லட்சம் இந்திய ரசிகர்களையும் அமைதிப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும்” என கூறினார். அதேபோல ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று சென்றது.

ஆனால் ஐபிஎல்லை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணி பெரிய அளவில் சோபிக்காத நிலையில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது அணியின் செயல்பாடுகளில் மாற்றங்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments