Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

vinoth
செவ்வாய், 13 மே 2025 (08:31 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருப்பவர் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. எதிர்பார்த்தது போலவே இன்று அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ள்ளது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி மாநில அணியின் பயிற்சியாளர் சரண்தீப் சிங் கோலியின் ஓய்வு முடிவு குறித்து பேசும்போது “நான் சில வாரங்களுக்கு முன் விராட் கோலியிடம் பேசும்போது இங்கிலாந்து தொடருக்குத் தயாராவதற்காக கவுண்ட்டி போட்டிகளில் விளையாடுவீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் இங்கிலாந்து ஏ அணியுடனானப் போட்டிகளில் விளையாடுவேன். 2018 ஆம் ஆண்டைப் போல இந்தமுறை அந்த தொடரில் மூன்று முதல் நான்கு சதங்கள் அடிக்க விரும்புகிறேன் எனக் கூறினார்.” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கோலியின் இந்த திடீர் ஓய்வு முடிவுக்கு என்னக் காரணம் என தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments