Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு உண்டு… இந்திய தொடருடன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ளும் டீன் எல்கர்!

Advertiesment
எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு உண்டு… இந்திய தொடருடன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ளும் டீன் எல்கர்!
, சனி, 23 டிசம்பர் 2023 (09:47 IST)
இந்திய அணி வரும் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரோடு தென்னாப்பிரிக்க அணியின் முனனாள் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் தனது சர்வதேசக் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது ஓய்வு பற்றி பேசியுள்ள அவர் “எனது தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென்பது எனது கனவு.  12 ஆண்டுகளாக அதை செய்ய முடிந்தது எனக்கு பெருமை.  இந்த பயணத்தை என்னுடைய அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

எல்லா நலல் விஷயங்களுக்கும் முடிவு என்பது உண்டு.  இந்திய தொடர்தான் என்னுடைய கடைசி தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதன் முதலில் சதமடித்த எனக்கு மிகவும் பிடித்த கேப்டவுன் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மகளின் பிறந்தநாளில் எனக்குக் கிடைத்த பரிசு.. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றது குறித்து டேரில் மிட்செல்!