Publish Date: Wed, 21 Jun 2023 (07:10 IST)
Updated Date: Wed, 21 Jun 2023 (07:15 IST)
நடந்து முடிந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி பரபரப்பான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதில் டேவிட் வார்னர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக டெஸ்ட் போட்டிகளில் சேவாக் எடுத்த ரன்களைக் கடந்துள்ளார். சேவாக் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 8207 ரன்கள் சேர்த்துள்ளார். இப்போது வார்னர் 8208 ரன்கள் சேர்த்து சேவாக்கை முந்தியுள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் அலஸ்டர் குக் 11845 ரன்களோடு முதல் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் சுனில் கவாஸ்கர்(9607), கிரீம் ஸ்மித்(9030), மேத்யு ஹைடன் (8625) ஆகியோர் உள்ளனர்.