Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த டேவிட் வார்னர்

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த டேவிட் வார்னர்
, திங்கள், 1 ஜனவரி 2024 (17:11 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்(37) பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

இவர் 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்கள் குவித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8695 ரன்கள் குவித்துள்ளார். 99 டி 20 போட்டிகளில் விளையாடி 2894 ரன்கள் அடித்துள்ளார்.

ஆஸ்., - பாகிஸ்., அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ள நிலையில்,  நாளை மறுதினம் சிட்னி மைதானத்தில்  நடைபெறவுள்ள  கடைசி டெஸ்ட் ( 3 ஆம் தேதி) போட்டியுடன் டெஸ்ட் ,மற்றும் ஒருநாள் போட்டியில்  இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடருக்கு அழைப்பு இருந்தால் அதில் விளையாட தயார் எனவும், ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ந்து டி 20 தொடரில் விளையாடுவேன் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் போட்டிகளில் கில் அப்படி விளையாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்… சுனில் கவாஸ்கர் அறிவுரை!