18 ஆவது சீசன் ஐபிஎல் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் நேற்று எல் கிளாசிகோ என சொல்லப்படும் சென்னை vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
வீரர்கள் வருவதும் விக்கெட்களை இழந்து செல்வதுமாக இருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து பேட் செய்த சி எஸ் கே அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த போட்டி முடியும் நேரத்தில் தோனி களமிறங்கினாலும் அவர் இரண்டு பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்கவில்லை என்பது சி எஸ் கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.