Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

Advertiesment
நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

vinoth

, சனி, 22 மார்ச் 2025 (08:12 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் டுவெய்ன் பிராவோ. உலகமெங்கும் டி 20 லீக் போட்டிகள் அதிகளவில் நடக்க ஆரம்பித்த போது அந்த லீக்குகளில் அதிகமாக விளையாடுபவர்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆனார்கள். அதில் ஒருவர்தான் டுவெய்ன் பிராவோ.

ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விளையாடியவர் ஆலரவுண்டர் டுவெய்ன் பிராவோ. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக 2023 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று அந்த அணியோடு பணியாற்றி வந்தார்.

ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்தார். இது சம்மந்தமாக தற்போது பேசியுள்ள பிராவோ “கொல்கத்தா அணியிடம் இருந்து அழைப்பு வந்தபோது நான் முதலில் தோனிக்குதான் போன் செய்து பேசினேன். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர்தான் நான் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனியின் மேல் வைத்திருக்கும் மரியாதை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!