Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

vinoth
வெள்ளி, 21 மார்ச் 2025 (07:29 IST)
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

இந்நிலையில்தான் பதினெட்டாவது சீசன் நாளை முதல் தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் போட்டிகள் என இந்தியா களைகட்டவுள்ளது. இந்த முறை மெஹா ஏலத்துக்குப் பின்னர் அனைத்து அணிகளும் பல புது வீரர்களோடு களமிறங்குகிறது.

இந்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆர் சி பி வீரரான ஏ பி டிவில்லியர்ஸ் இந்த முறை சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது எனக் கூறியுள்ளார்.  அவர் “சென்னை அணி பலமான அணிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த முறை பெங்களூர், குஜராத், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. இது சி எஸ் கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments