Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (15:04 IST)
22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் Great Rivalry போட்டியாக கருதப்படும் இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளார். கடந்த சீசனில் மூன்று போட்டிகளில் மெதுவான வேகத்தில் பந்து வீசியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹர்திக்கை கத்தி கூச்சலிட்டு கேலி செய்தனர். இந்நிலையில் “இந்த முறை நான் டாஸ் போட வரும் போதும், பேட் செய்யும் போதும், சிக்ஸ் அடிக்கும் போதும் என்னை உற்சாகப் படுத்துங்கள். அதுதான் நான் மும்பை ரசிகர்களிடம் வேண்டுவது. மைதானத்தில் மும்பை ஜெர்ஸியைத் தவிர நான் வேறு எதையும் பார்க்கக் கூடாது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments