CSK vs SRH மேட்ச் டிக்கெட்.. சீண்டாத சிஎஸ்கே ரசிகர்கள்! - அதிர்ச்சியில் சிஎஸ்கே நிர்வாகம்!

Prasanth Karthick
திங்கள், 21 ஏப்ரல் 2025 (14:57 IST)

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் மந்தகதியில் விற்பனையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம் சுமாராகவே இருந்து வருகிறது. கடந்த 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சீசன் ஆரம்பத்தில் சென்னையில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஓப்பன் ஆனதுமே விநாடிகளில் விற்றுத் தீர்ந்து வந்த நிலையில் பலரும் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கும் சம்பவங்களும் நடந்தது.

 

ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்வியால் கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள் மேட்ச்சை நேரில் சென்று பார்க்கும் ஆர்வத்தை விட்டுள்ளனர். வரும் 25ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான போட்டி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் இன்று அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பன் செய்யப்பட்டது. ஆனால் ஓப்பன் செய்யப்பட்டு சில மணி நேரங்கள் ஆகியும் டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் மந்தமாகவே விற்று முடிந்துள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்வி எதிரொலியாக டிக்கெட் விற்பனை அடி வாங்கியுள்ளது சென்னை அணி நிர்வாகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments