என்னை உள்ளே கூட விடமாட்டார்கள்… ஆனால் இப்போது என் பெயரில் ஸ்டாண்ட் – ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:46 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதுபோல ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை தன் தலைமையில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக அவருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு ஸ்டாண்ட்டுக்கு ரோஹித் ஷர்மாவின் பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சமம்ந்தமாக மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ள ரோஹித் ஷர்மா “சிறுவயதில் என்னை இந்த மைதானத்துக்குள்ளாக விடவே மாட்டார்கள். ஆனால் பின்னர் என் பெரும்பாலான கிரிக்கெட் இந்த மைதானத்தில்தான் இருந்தது. இப்போது என் பெயரில் ஒரு ஸ்டாண்ட் என்பது மிகப்பெரிய கௌரவமாக உணர்கிறேன். அந்த நிகழ்வின் போது என் மனநிலை எப்படி இருக்கப் போகிறது என்று எனக்கேத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments