Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

Advertiesment
சி எஸ் கே

vinoth

, செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (17:30 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் வென்றால் மட்டுமே அவர்களால் ப்ளே ஆஃப் செல்லமுடியும்.

ருத்துராகுக்குப் பதில் தோனி கேப்டனான பின்னர் சி எஸ் கே அணி ஒரு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. சி எஸ் கே அணியின் இந்த நிலைக்குக் காரணம் மாறிவரும் டி 20 போட்டிகளின் ஆட்டம் பற்றி சி எஸ் கே அணி புரிந்துகொள்ளாமல் மந்தமாகப் பேட்டிங் செய்வதுதான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனால் சிஎஸ்கே-வின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தமாகியுள்ளது. வழக்கமாக சி எஸ் கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அறிவித்தவுடனேயே ஆன்லைனில் விற்றுத் தீர்ந்துவிடும். அதன் பின்னர் கள்ளச்சந்தையில் பல மடங்கு விலையேற்றப்பட்டு விற்கப்படும்.

இந்நிலையில் சென்னை அணியின் செயல்பாடு குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நம்பிக்கையாகப் பேசியுள்ளார். அதில் “இதுவரையிலான சென்னை அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்திருக்காது எனத் தெரியும். ஆனால் அதுதான் கிரிக்கெட். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். 2010 ஆம் ஆண்டு இதே போல தொடர் தோல்விகளுக்குப் பிறகுதான் மீண்டெழ்ந்து கோப்பையை வென்றோம். அதே போல இந்த ஆண்டும் சி எஸ் கே அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனப் பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!