Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே ஜெயிக்கணும்னா இதுமட்டும்தான் ஒரே வாய்ப்பு! – ரசிகர்கள் புலம்பல்ஸ்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:54 IST)
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்ற நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வழி என்ன என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

நேற்றைய ஆட்டத்தோடு சிஎஸ்கே ஆடிய மொத்தம் 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் தரவரிசை பட்டியலில் இறுதியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 2008 ஐபிஎல் தொடங்கியது முதலாக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ப்ளே ஆஃப் இழக்காத அணி என்று பெயர் பெற்ற தோனியின் சிஎஸ்கே அணி தற்போது கண்டுள்ள வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போதும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பிருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதற்கு இனி மீதமுள்ள 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதனால் சென்னை அணி 14 புள்ளிகளை அடையும். இது சாத்தியமாகும் வாய்ப்புகள் உண்டு. என்றாலும் சிஎஸ்கேவுக்கு மேலே உள்ள பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் இனி வரும் ஆட்டங்களில் தோற்றால் மட்டுமே தரவரிசையில் முன்னேற முடியும். அதற்கு வாய்ப்புகள் அறவே குறைவு எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார்… கவாஸ்கர் கருத்து!

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments