Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் சன்டிமால்

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் சன்டிமால்
, வியாழன், 21 ஜூன் 2018 (16:44 IST)
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றசாட்டில் தண்டிக்கப்பட்ட தினேஷ் சன்டிமால் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆம்பயர்கள் அலீம் தார் மற்றும் இயான் கோல்டு இலங்கை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியாக சந்தேகம் அடைந்தனர். 
 
இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடத்திய விசாரணையில் இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமாலின் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் சன்டிமால் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஐசிசி அளித்த தடை உத்தரவை எதிர்த்து தினேஷ் சன்டிமால் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டை ஐசிசி சிறப்பு அதிகாரி ஒருவர் விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கால்பந்து: இன்றைய ஆட்டங்கள்