செய்ண்ட் லூசியா டெஸ்ட்: டிராவில் முடிந்தது இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் போட்டி
, செவ்வாய், 19 ஜூன் 2018 (16:01 IST)
செய்ண்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செய்ண்ட் லூசியாவில் கடந்த 14ம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சன்டிமால் 119 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 330 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஸ்மித் 61 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, விளையாடிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 342 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மெண்டிஸ் 87 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடித்து, விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 5-ஆம் நாள் ஆட்ட முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
அடுத்த கட்டுரையில்