இதெல்லாம் நடக்குற கதையா? பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல இருக்கும் வாய்ப்புகள்!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (06:59 IST)
நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் வலிமையாக உள்ளது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

ஆனால் இன்னொரு அணியான பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்வதற்கும் சில நடக்க இயலாத வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் நியுசிலாந்தை விட கூடுதல் நெட் ரன்ரேட் பெறும். அப்போது நான்காவது அணியாக அரையிறுதிக்கு செல்லும்.

ஒரு வேளை இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 2.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை எட்டவேண்டிவரும். இந்த இரண்டுமே நடக்க சாத்தியமில்லாதது என்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments