நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (14:20 IST)
பெர்த்தில் தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ஆஸி வேகப்பந்து தாக்குதலில் நிலைகுலைந்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ஆஸி அணி தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. ஆஸி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை பும்ரா அவுட்டாக்கி டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்தார். தற்போது ஆஸி அணி 4 விக்கெட்களை இழந்து 33 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறார். பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலியை சீண்டும் விதமாக ஆஸி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியது குறித்து ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பும்ராவிடம் “ஒரு மித வேகப்பந்து வீச்சாளரான நீங்கள் இந்திய அணியை வழிநடத்துவதை எப்படி உணர்கிறீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு பும்ரா பொறுமையாக ‘நான் 150 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடியவன். அதனால் நீங்கள் என்னை வேகப்பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார். அந்த கேள்விக்கான பதிலை இப்போது பெர்த் டெஸ்ட்டில் தனது பந்தின் மூலமாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments