இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!

vinoth
புதன், 17 செப்டம்பர் 2025 (08:13 IST)
நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடர் பெரியளவில் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஏனென்றால் போட்டிகள் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவுகளாக அமைகின்றன. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக் கூட மந்தமாகதான் இருந்தது.

இந்த தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் மிக எளிதான வெற்றியைப் பெற்றது. UAE உடனான போட்டியை ஐந்தாவது ஓவரிலேயே வென்றது. அதே போல பாகிஸ்தானுடனான போட்டியையும் 16 ஆவது ஓவரில் வென்றது. இதன் மூலமாக இந்திய அணியின் நெட் ரன் ரேட் 4.7 என்ற அளவில் உள்ளது. இந்நிலையில் தற்போது முதல் ஆளாக அடுத்த சுற்றான சூப்பர் நான்கு சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஓமன் அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் ஓமன் அணியை செப்டம்பர் 19 ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments