Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஒரு பவுலரா?... மெக்ராத், மலிங்கா வரிசையில் இந்திய வீரரை சேர்த்த ரவிசாஸ்திரி!

vinoth
வெள்ளி, 14 ஜூன் 2024 (08:43 IST)
கடந்த ஆண்டு முழுவதும் காயத்தால் அவதிப்பட்ட பும்ரா அதன் பிறகு கம்பேக் கொடுத்து தன்னுடைய ஃபார்மை மீண்டும் பெற்று சர்வதெச போட்டிகளில் கலக்கி வருகிறார். நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் வரின் பவுலிங் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் பும்ரா பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி “உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பவுலரை இந்தியா இது வரை கொண்டிருந்ததில்லை. பும்ராவின் வருகைக்குப் பிறகு அது நடந்துள்ளது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை ஒரு இந்தியர் ஆதிக்கம் செலுத்துவார் என நான் கனவிலும் நினைத்ததில்லை.

பேட்ஸ்மேன்கள் பும்ராவை அடித்து ஆடுவதைப் பார்ப்பதே அரிதினும் அரிதான ஒன்றாக உள்ளது. தற்போதைய சூழலில் அவர்தான் மிகச்சிறந்த கிரிக்கெட்டர். க்ளென் மெக்ராத் மற்றும் மலிங்கா போன்றோர் ஆதிக்கம் செலுத்தி நாம் பார்த்துள்ளோம்.  அவர்களின் தாக்கத்தை பும்ராவிடம் பார்க்க முடிகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

அடுத்த கட்டுரையில்
Show comments