Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு இது சரிபடாது… அவர் தன் இடத்தில் இறங்கவேண்டும் –முன்னாள் வீரர் அட்வைஸ்!

vinoth
வியாழன், 13 ஜூன் 2024 (16:23 IST)
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது.

வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்தியாவுக்கும் இதே நிலைமைதான். இந்திய அணியில் இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மூன்று போட்டிகளில் இரண்டில் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் “கோலி தன்னுடைய இடமான மூன்றாவது இடத்தில் இறங்கவேண்டும். ரிஷப் பண்ட் அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவேண்டு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments