Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (06:49 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணி இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அந்த அணியில் கேப்டன் பொறுப்பு ரோஹித்திடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்குக் கைமாற்றப்பட்டது. அது முதல் அந்த அணியில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா இல்லாதது பின்னடைவாக அமைந்தது. அவர் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைந்தார். இன்று பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் அவர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது. மேலும் கடந்த போட்டியில் விளையாடாத ரோஹித் ஷர்மாவும் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மகேளே ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். இரண்டு மேட்ச் வின்னர்கள் அணியில் இணைய உள்ள நிலையில் மும்பை அணி வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments