Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் இருந்து விலகிய டுவெய்ன் பிராவோ… ரசிகர்கள் அதிர்ச்சி!

vinoth
சனி, 28 செப்டம்பர் 2024 (07:34 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் டுவெய்ன் பிராவோ. உலகமெங்கும் டி 20 லீக் போட்டிகள் அதிகளவில் நடக்க ஆரம்பித்த போது அந்த லீக்குகளில் அதிகமாக விளையாடுபவர்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆனார்கள். அதில் ஒருவர்தான் டுவெய்ன் பிராவோ.

ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், பின்னர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விளையாடியவர் ஆலரவுண்டர் டுவெய்ன் பிராவோ. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று அந்த அணியோடு பயனித்து வருகிறார்.

அதன் பின்னர் கரிபியன் லீக் தொடரில் மட்டும் விளையாடி வந்த பிராவோ, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் விலகி, தற்போது கே கே ஆர் அணியின் ஆலோசகராக இணைந்துள்ளார். அவரின் இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments