Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்பளம் முழுவதையும் பாகிஸ்தான் மக்களுக்கே கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்!

Advertiesment
சம்பளம் முழுவதையும் பாகிஸ்தான் மக்களுக்கே கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்!
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:35 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.

அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சர்வதேச கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வந்தன. அதற்குக் காரணம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களின் பேருந்து மேல் தாக்குதல் நடத்தப்பட்டதே.

ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட கிரிக்கெட் வாரியங்கள் சம்மதித்து வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் நாடுகள் சென்று விளையாடி வந்த நிலையில் இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த அணிக்கு தலைமை தாங்கும் பென் ஸ்டோக்ஸ், இந்த தொடரின் மூலம் பெறும் சம்பளம் முழுவதையும் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இழப்பு நமக்குதான்…” ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் பவுலர் கருத்து!