Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ ரூட் வீட்ல விசேஷம்… கேப்டனாகும் பென் ஸ்டோக்ஸ்!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (09:04 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தற்காலிக கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வாரியங்கள், ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு வரும் 8 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

சௌத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டிக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் விலகிக் கொள்ள பென் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்த இருக்கிறார்.  கொரோனா ஊரடங்குக்குப் பின்னான போட்டி என்பதால் இந்த போட்டியைக் காண உலகமே ஆவலாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments