இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் ஓய்வு முடிவில் இருந்து பின் வாங்கி நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்தர். ஆனால் அந்த தொடரில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அதனால் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையிலும் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். இந்நிலையில் இப்போது அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் முக்கியமான மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை பென் ஸ்டோக்ஸ் எட்டியுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை சர் கேரி சோபர்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் ஆகிய இரு ஜாம்பவான்கள் மட்டுமே எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.