Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2025 (09:48 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரோடு ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிசிசிஐ, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரை சம்பளப் பட்டியலில் A+ பிரிவில் இருந்து A பிரிவுக்கு கீழிறக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக ஒரு தகவல் பரவியது. இவர்கள் மூவரும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகப்போகிறது. அதனால் அவர்களை A பிரிவுக்கு மாற்றி சம்பளத்தைக் குறைக்க பிசிசிஐ நினைப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் கோலி, ரோஹித், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரை A+ பிரிவிலேயே வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இஷான் கிஷனும் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments