இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது அவர் ஓய்வெடுத்து வரும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு திட்டமிடப்பட்டு இருந்த இன்னொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை என மருத்துவர் குழு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிறு சிறு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் அவரை எப்படியாவது உலகக்கோப்பை தொடருக்கு கொண்டுவர வேண்டும் என பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் எப்படியாவது இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பு பிசிசிஐ- இடமும் இந்திய அணியிடமும் இருக்கிறது.