Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:18 IST)
இருநாட்டு அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இருநாட்டுத் தொடர்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. அதனால் இப்போதிருக்கும் இந்திய வீரர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தான் மைதானங்களில் விளையாடியதே இல்லை.

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. இதனால் இரு அணிகளையும் ஒரு க்ரூப்பில் வைத்துப் போட்டிகளை நடத்தி வருகிறது ஐசிசி. ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டியை விட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காணவே உலகளவில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியக் கிரிக்கெட் வாரியம், இனிமேல் ஐசிசி தொடர்களில் இந்திய அணியைப் பாகிஸ்தான் அணி இருக்கும் க்ரூப்பில் இடம்பெறச் செய்ய வேண்டாம் என ஐசிசிக்குக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பிசிசிஐ-யின் இந்த முடிவும் இருக்காலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments