Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் பற்றி அப்படி சொன்னதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்… முன்னாள் வீரர் கருத்து!

Advertiesment
பாகிஸ்தான் பற்றி அப்படி சொன்னதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்… முன்னாள் வீரர் கருத்து!

vinoth

, வியாழன், 27 பிப்ரவரி 2025 (14:35 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு வல்லுனர்கள் பலக் காரணங்களை சொல்லி வருகின்றனர். அணியில் ஒற்றுமையின்மை, எந்த வீரரும் பொறுப்போடு விளையாடாதது மற்றும் போட்டியின் எந்தக் கட்டத்திலும் போராடும் தன்மையை வெளிக்காட்டாதது என அனைத்துத் துறைகளிலும் அந்த அணி பலவீனமாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாகூரில்தான் நடக்கும் எனப் பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது தனதுப் பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்நிலையில் இப்போது “இறுதிப் போட்டி லாகூரில்தான் நடக்கும் என்று நான் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பாகிஸ்தான் அணி இப்படி மோசமாக விளையாடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது இந்த தொடரில் நான் இந்திய அணிதான் விளையாடவேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொனால்டோ போல கோலி ஒரு முழுமையான வீரர்.. பாராட்டிய பாகிஸ்தான் பவுலர்!