நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கில் களமிறங்கினார்கள். ஆனால் அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் 2 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து விட்டதை அடுத்து விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் புஜாராவும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காத் ஸ்ரயாஸ் ஐயர் 82 ரன்களோடு களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 278 ரன்களை சேர்த்திருந்தது.
இதையடுத்து இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 404 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முடித்தது. அதன் பின்னர் தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 133 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்களையும், முகமது சிராஜ் 3 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர்.