இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி சற்று முன் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் 404 ரன்கள் எடுத்தது என்பதும் புஜாரே, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் ஆகிய மூவரும் அரைசதங்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் முதல் ஓவரை சிராஜ் போட்ட நிலையில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே வங்கதேச அணியின் விக்கெட் விழுந்தது. இதனை அடுத்து 4-வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் இரண்டாவது விக்கெட் விழுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வரை வங்கதேச அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்களை எடுத்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது