பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று டாக்கா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி எடுத்த ஒரு முடிவுதான் கிரிக்கெட் உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணி 50 ஓவர்களையும் தங்கள் சுழல்பந்து வீச்சாளர்களைக் கொண்டு மட்டுமே வீசியது. அகேல் ஹுசேன், ரோஸ்டன் சேஸ், கேரி பியரி, மோட்டி, அதான்ஸே ஆகிய ஐந்து சுழலர்கள் தலா 10 ஓவர்களை வீசினர். 50 ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் இப்படி 50 ஓவர்களையும் சுழல்பந்து வீச்சாளர்களே வீசியது இதுவே முதல் முறை.
இந்த இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்களை இழந்து 213 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணியும் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 213 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.