தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் அவர்தான்… கோலியே புகழ்ந்த வீரர்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:46 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் இருந்து அவரின் பேட்டிங் செயல்பாடு மந்தமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “தற்போது விளையாடி வரும் வீரர்களில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர் பாபர் ஆசம்தான். அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் பேட்டிங்கை நான் விரும்பி பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.

மூன்று வடிவிலான போட்டிகளிலும் 50 ரன்கள் சராசரியை வைத்திருக்கும் ஒரே வீரரான கோலி, இளம் வீரரான பாபர் ஆசமைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments