Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இழந்த இந்தியா!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:32 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதலில் நடந்த இரு டி 20 போட்டிகளிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் இந்திய அணி மீண்டெழுந்து வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து நேற்று தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 61 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 171 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பிராண்டன் கிங் அதிகபட்சமாக 55 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

விராட் கோலிக்குக் கேப்டன் பதவி தேவையில்லை.. ஆர் சி பி இயக்குனர் பதில்!

எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments