ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமுக்கு இடம் மறுப்பு!

vinoth
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (13:56 IST)
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது, இதன் அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த அணியின் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி : சல்மான் அலி அஹா(கேப்டன்), அப்ரர் அகமது, பஹீம் அஷ்ரஃப், பகார் ஸமான், ஹாரிஸ் ராஃப், ஹசன் நவாஸ், ஹுசைன் டலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம், ஷகீப்ஸாதா பர்ஹான், சைய்ம் அயுப், சல்மான் மிர்ஸா, ஷகீன் ஷா அஃப்ரிடி, சுஃப்யான் மோகிம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments