Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 14 மார்ச் 2025 (10:49 IST)
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து இன்னும் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். இத்தனைக்கும் அந்த அணியில் சேவாக், கம்பீர், ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற ஸ்டார் வீரர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணி புது வீரர்களோடு களமிறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு அந்த அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கே எல் ராகுலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதனால் அவரை அந்த அணியின் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுல் கேப்டன் பதவியை ஏற்க மறுத்த விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் தற்போது அந்த அணிக்குக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 22 முதல் மே 25 வரை ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்ணாடியைக் காண்பித்துள்ளது… முன்னாள் வீரர் காட்டம்!

மகளிர் ஐபிஎல்.. எலிமினேட்டர் சுற்றில் அபார ஆட்டம்.. இறுதிக்கு தகுதி பெற்றது மும்பை..!

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments