Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்ணாடியைக் காண்பித்துள்ளது… முன்னாள் வீரர் காட்டம்!

vinoth
வெள்ளி, 14 மார்ச் 2025 (08:21 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி இருந்து லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. அதே போல பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோரும் பாகிஸ்தான் அணி மற்றும் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் கம்ரான் அக்மலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். அவர் “சாம்பியன்ஸ் கோப்பை இறுதிவிழாவில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் வாரிய நிர்வாகிகள் இல்லை. ஏனென்றால் நாம் அதற்குத் தகுதியானவர்கள் இல்லை. மிகச்சிறிய அணிகள் கூட நம்மை வீழ்த்தின. நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. எல்லோரும் அவரவர்க்காக விளையாடுகிறார்கள். ஐசிசி நாம் யார் என்பதைக் கண்ணாடி மூலம் காட்டிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. எலிமினேட்டர் சுற்றில் அபார ஆட்டம்.. இறுதிக்கு தகுதி பெற்றது மும்பை..!

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments