முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: எத்தனை ரன்கள் வித்தியாசம்?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 404 ரன்கள் எடுத்தது என்றும் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து அந்த அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அந்த அணி 324 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
இந்த போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது