Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒன் டே மேட்சுலதான் நீங்க.. டி20ல நாங்கதாண்டி! – இன்றைய போட்டியிலும் தடம் பதிக்குமா இந்தியா?

ஒன் டே மேட்சுலதான் நீங்க.. டி20ல நாங்கதாண்டி! – இன்றைய போட்டியிலும் தடம் பதிக்குமா இந்தியா?
, ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (11:11 IST)
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 1-2 என்ற வீதத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் அடுத்ததாக தொடங்கிய 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுள்ளது.

முக்கியமாக ஆஸ்திரேலியா சேஸிங்கின்போது நடராஜன், சஹல் வீழ்த்திய விக்கெட்டுகள் அணிக்கு பலமாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா டி20 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னிங்ஸ் தோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள்: நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்!