Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

vinoth
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (14:21 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 474 ரன்கள் சேர்த்தது.

அதையடுத்து ஆடிவரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் நாள் ஆட்டத்தில் கோலி மற்றும் ஆஸி அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் களத்தில் நடந்தது. அதனால் கோலிக்கு ஐசிசி 20 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று கோலி 36 ரன்களில் அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறி பெவிலியன் நோக்கி சென்ற போது ஆஸி ரசிகர்கள் அவரைக் கிண்டல் செய்யும் விதமாகக் கூச்சலிட்டனர். இதனால் திரும்பி வந்த கோலி ரசிகர்களை நோக்கி முறைத்துப் பார்த்தார். பின்னர் அவரைப் பொறுப்பாளர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர். ஆஸி ஊடகங்களும் கோலியைக் கோமாளி போல சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

அடுத்த கட்டுரையில்
Show comments