Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#AsiaCup2023 : இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா இருவரும் அரைசதம்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (18:36 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில், உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

இந்த நிலையில் இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதனை அடுத்து மைதானம் கவர்களால் மூடப்பட்டது 

மழை நின்ற பின் மீண்டும் போட்டி தொடங்கியது. இதில், ரோஹித் சர்மா 11 ரன்னும், சுப்மன் கில் 10 ரன்னும், விராட் கோலி  4 ரன்னும்  ஸ்ரேயாஷ் அய்யர் 14 ரன்னுடன் அவுட்டாகினர்.

தற்போது இஷான் கிஷன் 74 ரன்னும், ஹர்த்திக் பாண்டியா 53 ரன்னும் எடுத்து   நிதானமாக விளையாடி வருகின்றனர்.

தற்போது இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் தரப்பில், ஷாகீன் அப்ரிடி ரோஹித் சர்மா, கோலியை கிளீன் போல்ட்டாக்கி 2 விக்கெட் கைப்பற்றினார். ஹாரிஸ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச வீரரை பாடி ஷேமிங் செய்தாரா ரிஷப் பண்ட்?... கிளம்பிய சர்ச்சை!

சச்சினை முந்தி கோலி படைத்த சாதனை…!

ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி.. நாளை முடிவு தெரியுமா?

233 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.. பேட்டிங்கில் விளாசும் ரோஹித் - ஜெய்ஸ்வால்

மளமளவென விழும் வங்கதேச விக்கெட்டுக்கள்.. ஆனாலும் டிராவை நோக்கி செல்லும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments