Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கைக்கு மாற்றம்?

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (18:19 IST)
ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம்  நாடுகள் கலந்து கொள்கின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடர் இம்முறை(2023)  உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை   நமது அண்டை நாடான பாகிஸ்தான் பெற்றுள்ளது.

ஆனால், பாகிஸ்தானில் தொடர் நடைபெற்றால் அதில், இந்தியா பங்கேற்காது என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடத்தவும், இந்தியா பங்கேற்கவுள்ள ஆட்டத்தை மட்டும் பொதுவான இடங்களில் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்துவதைவிட இலங்கையில் நடத்தலாம் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு  மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments