Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு 444 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

India -australia test
, சனி, 10 ஜூன் 2023 (19:22 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில்,  ஆஸ்திரேலியா அணி 2 வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு  270 எடுத்து டிக்ளேர் செய்த நிலையில்,  இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி இன்னிங்க்ஸில்  296 ரன்களில் ஆல் அவுட்டானது. ரகானே 89 ரன்னிலும்,   ஷர்துல் தாகூர் 51 ரன்னிலும் அவுட்டாகினர்.  ஜடேஜா 48 ரன்கள்  அடித்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல், போலண்ட், கீர்ன் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்,

அதன்பின்னர், ஆஸ்திரேலியா அணி 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. டேவிட் வார்னர்  ஒரு ரன்னும், உஸ்மான் கவாஜா 13 ரன்னும்  அடித்தனர்.

லபுசேன்- ஸ்மித் ஜோடி62 ரன்கள் அடித்தது. டிராவிட் ஹெட்18 ரன் அடித்தார்.

3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டும், 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலையில் உள்ளளது.

இன்றைய  4 வது  நாள் ஆட்டத்தில், லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார்., கிரீன் 25 ரன்னில் அவுட்டானார். 4 ஆம் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து, 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 41 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா அணி 2 வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு  270 எடுத்து டிக்ளேர் செய்த நிலையில்,  இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய ஜூனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி..!