Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#Asia Cup -2023 : பாகிஸ்தானுக்கு எதிரான ODI-ல் கோலி, ராகுல் இருவரும் சதம்

kohli
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (18:37 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இதில் களமிறங்கிய நான்கு இந்திய பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா 56 ரன்னும், சுப்மன் கில் 58ரன்னும் அடித்து அவுட்டாகினர்.

இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 107 ரன்னும், கே.எல்.ராகுல்  109 ரன்னும் அடித்து களத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில்,அஃரிடி மற்றும் கான் இருவரும் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய போட்டியில், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

களமிறங்கிய 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. 300 ரன்களை தாண்டுமா இந்தியா?